Entertainment
சுவையான தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி
புளியை எலுமிச்சை அளவு எடுத்து வாணலியில் மிதமான தீயில் 2 நிமிடங்கள் வதக்கவும்.
ஆறிய பிறகு சிறிதளவு தண்ணீட் சேர்த்து பேஸ்ட் போல் மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ளவும்.
அரைகிலோ பழுத்த தக்காளியை தண்ணீர் எதுவும் விடாமல் பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் வாணலியை ஏற்றி 8 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும். நல்லெண்ணெய் காய்ந்த உடன் ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து,தாளிக்கவும் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட், புளி பேஸ்ட், சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு 20 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
பிறகு அரைடீஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, 4 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், அரைடீஸ்பூன் வெந்தயப்பொடி, 1 டீஸ்பூன் கடுகுப்பொடி சேர்த்து மசாலா வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
இறுதியாக 2 டேபிள் ஸ்பூன் வெல்லம் சேர்த்து கிளறி இறக்கி கைபடாமல், ஒரு ஜாடியிலெடுத்து வைத்து தேவைக்கு பயன்படுத்தவும்.
