நாளை முதல் ஆம்னி பேருந்துகளை இயக்க திட்டம்

நாளை முதல் ஆம்னி பேருந்துகளை இயக்க திட்டம்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 6 மாத காலமாக கடுமையான லாக் டவுன் அமல்படுத்தப்பட்டது. முதலில் 21 நாட்கள் கடும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. இந்த லாக் டவுனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு இப்போது லேசான திறப்புக்கு பின் ஒவ்வொரு தொழிலாக மீண்டு வருகிறது.

அந்த வகையில் ஆம்னி பேருந்து சேவையும் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் மிக அதிகமான ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

கொரோனா பிரச்சினையால் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் நாளையில் இருந்து ஆம்னி பஸ் சேவை தொடங்க உள்ளது. முதல் கட்டமாக 952 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.