டாம் அண்ட் ஜெரி கதாபாத்திரத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பல வருடங்களாக டாம் அண்ட் ஜெரி கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு குழந்தைகள் அனைவரும் அடிமை என சொல்லலாம்.
அந்த அளவு பல குழந்தைகள் டாம் அண்ட் ஜெரியை விரும்பி பார்க்கின்றனர். இந்த டாம் அண்ட் ஜெரியை தயாரித்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இப்போது புது முயற்சியாக டாம் அண்ட் ஜெரியை திரைப்படமாக்கியுள்ளது.
இதில் மற்ற கதாபாத்திரங்கள் மனிதர்களாகவே நடிக்க டாம் அண்ட் ஜெரி கதாபாத்திரங்கள் கார்ட்டூன் ஆகவே நடிக்க இருக்கிறது.
இப்படத்தை அடுத்த ஆண்டு வெளியிட இருக்கிறதாம் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்