Latest News
இன்றுமுதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
தமிழகத்தில் இன்று காலை முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வடைந்துள்ளது. சில நாட்கள் முன் இந்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் இன்னும் 3 மாதத்திற்குள் 60 கிமீக்கு ஒன்று என்ற அடிப்படையில் இனி சரியான முறையில் இருக்கும் என கூறி இருந்தார் இந்த நிலையில் இன்று முதல் சுங்கசாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது.
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணங்கள் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வானகரம் சுங்கச் சாவடி உட்பட 27 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
