டோக்கியோ ஒலிம்பிக் போட்டி- ராமநாதபுரம் போலீஸ் தேர்வு

16

வரும் ஜூலை 23ல் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இதில் பங்கேற்க தமிழ்நாடு சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிங்கப்புலியாம்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் நாகநாதன் என்பவர் தேர்வாகியுள்ளார்.

இவருக்கு அவரது கிராம மக்கள், தமிழ்நாடு அத்தெலடிக் அசோசியேஷன் தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், செயலாளர் சி.லதா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாகநாதன் தற்போது சென்னை எழும்பூரில் உள்ள தனி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச்சில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் நாகநாதன் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இவர் அகில இந்திய அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் காவல்துறை சார்பில் பங்கேற்றுள்ளார்.

பாருங்க:  அதுல்யா ரவி புதிய புகைப்படங்கள்
Previous articleநேரடியாக டிவியில் ரிலீஸ் ஆகும் சமுத்திரக்கனியின் படம்
Next articleதோனியை புகழ்ந்த வரு