Published
3 years agoon
By
Vinoஅமேசான் ஆன்லைன் டெலிவரி ஆப்பில் டாய்லட் பேப்பர் அவுட் ஆஃப் ஸ்டாக் ஆகியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை நினைத்து இடிந்துப்போய் உள்ளனர். ஊரடங்கு காரணமாக மக்கள் தம் பெரும்பாலான நேரங்களை வீட்டில் குடும்பத்துடன் செலவிட்டு வருகின்றனர். அதனால் பொருட்களின் உற்பத்தி, தொழில்கள் எல்லாம் முடங்கிவிட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளானர். தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமே வாங்கிக்கொள்கின்றனர்.
இதனால் அதிகளவிலான பயன்பாட்டால் சில பொருட்கள் இப்போது ஆன்லைனிலும் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. அதில் முதல் இடத்தில் இருப்பது கழிவறையில் பயன்படுத்தும் டாய்லட் பேப்பர்தான் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.