இன்று சென்னை வரும் சசிகலா

21

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில்தான் சசிகலா அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் அணி அனைத்தும் சசிகலா அணியில் இருந்து பிரிந்த தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடன் இணைத்துக்கொண்டனர்.

இப்படி பரபரப்பாக எல்லாம் நடந்த நேரத்தில்தான் சசிகலா ஜெயில் சென்றார். அந்த நேரத்தில் சசிகலா அணியினரை இணைத்து அமமுக என்றொரு கட்சியை டிடிவி தினகரன் நிறுவினார்.

இந்த நிலையில் கடந்த 27ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட சசிகலா இன்று சென்னை வருகிறார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று சென்னை வரும் சசிகலாவுக்கு கட்சி சார்பில் பலத்த வரவேற்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாருங்க:  ஜனவரி 27ல் சசிகலா விடுதலை- முழு விவரம்