Latest News
இன்று வைகுண்ட ஏகாதசி அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு
மார்கழி மாதத்தில் பெருமாளுக்கு கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று வைகுண்ட ஏகாதசி. இந்த நாள் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதியில் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும் ஒரு சுபமங்கள நாளாக இது பார்க்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்து இருக்கும் .உள்ளூர் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கி பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இன்று ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மதுரை அழகர் கோவில், கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு உள்ளிட்ட முக்கிய விசேஷங்கள் நடக்க இருக்கின்றன.