Latest News
இன்று தை அமாவாசை- முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறவாதீர்
ஆண்டு தோறும் வரும் அமாவாசை தினங்கள் அனைத்துமே முன்னோர் திதி கொடுக்க முக்கிய நாட்கள்தான். இருந்தாலும் தை மாத அமாவாசையும் ஆடி மாத அமாவாசையும் மிக முக்கியமான அமாவாசையாக மக்களால் கருதப்படுகிறது.
நமக்கு வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளான, திருமணத்தடங்கல், குழந்தையின்மை, விவாகரத்து என நாம் வாழ்வு சார்ந்த பல விசயங்களில் கிரகரீதியாக நாம் பாதிக்கப்பட்டாலும் முன்னோர்களின் ஆசி இருந்தால் இது போல விசயங்களில் இருந்து நாம் தப்பிக்கலாம்.
முன்னோர்களின் ஆசியை பெற வேண்டுமானால் அவர்களுக்கு தவறாமல் திதி தர்ப்பணம் போன்றவை செய்ய வேண்டும்.
மற்ற நாட்களில் செய்யாவிட்டாலும் முன்னோர்களுக்குரிய முக்கிய நாளாக கருதப்படும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசைக்கு கண்டிப்பாக முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்ய வேண்டும் .
முன்னோர்கள் இறந்த திதிக்கு தவறாமல் திதி தர்ப்பணம் செய்யாதவர்கள் கூட இந்த நாளில் தவறாமல் திதி தர்ப்பணம் செய்தால் அவர்களுக்கு முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும்.
அதனால் மறக்காமல் இன்று தை அமாவாசைக்கு நீர் நிலைகளில், கடற்கரைகளில் , புண்ணிய தலங்களில் நீராடி உரிய வேத விற்பன்னர்களை கொண்டு திதி தர்ப்பணம் செய்து விடுங்கள். அது முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும்.