கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன். இவர் கமல் நடித்த தேவர் மகன் படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி விட்டார். போற்றி பாடடி பெண்ணே என்ற பாடலில் வருவார்.
தமிழில் 3, பூஜை, ஏழாம் அறிவு, உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.
கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு இசையும் அமைத்திருந்தார்.
கமலைப்போலவே பல்வேறு திறமைகள் கொண்டவர் ஸ்ருதி ஹாசன்.
சில வருடங்களாக அதிக படங்களில் நடிப்பதில்லை. சாந்தனு என்ற இசைக்கலைஞரை காதலித்து வருகிறார்.
இன்று இவரின் பிறந்த நாள் இதையொட்டி ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாமும் இவரை வாழ்த்துவோம்.