இன்று சிவபெருமானுக்குரிய தினமாக மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் சிவனுக்குரிய விழாவாக சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டும் சிவராத்திரி விழா உலகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள தலமாகும்.
இந்த கோவில் தேசிய புண்ணியஸ்தலமாக கருதப்படுவதால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து அதிகமான பக்தர்கள் இங்கு வருகை தருவார்கள். காசிக்கு அடுத்து ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்பதால் காசிக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் ராமேஸ்வரம் வருவார்கள்.
இன்று சிவராத்திரி என்பதால் அதிகமான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்து வருகின்றனர். அங்கு அக்னி தீர்த்தகடற்கரையில் மணலால் லிங்கம் செய்து ராமநாதரை பூஜித்து வருகின்றனர்.