விஜய் டிவியில் கலக்க போவது யாரு சீசன் 2 வில் பங்கேற்றபோது சிவகார்த்திகேயனை அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
எல்லோரையும் விட வித்தியாசமாக யாரும் செய்யாத புதிய புதிய விசயங்களை முயற்சி செய்து சிவகார்த்திகேயன் செய்த விசயங்கள் எல்லோரையும் கவர்ந்தது.
பார்த்த எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்கவைத்து டைட்டில் வின்னராகி டைட்டில் வின்னருக்கு அறிவித்த 5 லட்சம் ரூபாயையும் வென்றார்.
இப்படித்தான் சிவகார்த்திகேயனின் வெற்றி சரித்திரம் ஆரம்பமானது. பின்பு அதே விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அதன் மூலமும் பிரபலம் ஆனார்.
அந்த நேரத்தில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் கதாநாயகனாக நடித்தார். அடுத்தடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என நடித்தார்.
அடுத்தடுத்த படங்களில் வெற்றிக்கோட்டையை தொட்ட சிவகார்த்திகேயன் இன்று தொட முடியாத உச்சத்தில் உள்ளார். பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறார் என்றால் அவரின் உழைப்பும் திறமையும் மட்டுமே காரணம் ஆகும்.
இன்று சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் ஆகும்.