cinema news
இன்று பாடகர் எஸ்.பி.பி அவர்களின் பிறந்த நாள்
கடந்த 1969ம் ஆண்டு வெளிவந்த அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஆயிரம் நிலவே வா. இந்த பாடலின் மூலம் தான் எஸ்.பி.பி சினிமாவில் பாடகராக அறிமுகமானார்.
ஆனால் முதலில் இவர் பாடி வெளிவந்த பாடல் சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளைய கன்னி என்ற பாடல்.அதற்கு முன்பே அடிமைப்பெண்ணில் ஒப்பந்தம் ஆகிவிட்டாலும் முதலில் வந்தது சாந்தி நிலையம்தான்.
அதற்கு பிறகு தமிழ் சினிமா மட்டுமல்லாமல், தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் சேர்த்து 40000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் இவர்.
80,90களில் வந்த பாடல்களில் பெரும்பாலான பாடல்களில் எஸ்.பி.பி இல்லாமல் இருக்க மாட்டார். அந்த காலத்தில் டி.எம்.எஸ் குரல் அனைத்து நடிகர்களுக்கும் பொருந்துவது போல் 80களில் நடித்த ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, மோகன், பாக்யராஜ் உள்ளிட்ட பலருக்கும் 90களில் வந்த விஜய், அஜீத்துக்கும், 2000ங்களில் வந்த தனுஷ் உட்பட பல நடிகருக்கும் பொருந்தி போனது.
கடந்த 2020ல் எஸ்.பி.பி மறைந்தார். இவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும் தென்னக மொழி பேசும் அனைத்து ரசிகர்களும் எஸ்.பி.பியை என்றும் மறக்க மாட்டர்.
இன்று எஸ்.பி.பி அவர்களின் பிறந்த நாள் ஆகும்.