Published
1 year agoon
[10:04, 21/03/2022] ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம் துலாம் ராசிக்காரர்கள் இன்று செய்ய வேண்டியது என்ன?
21.3 .2022 திங்கட்கிழமை அன்று மதியம் 3.09 க்கு ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் .
அதேநேரத்தில் கேது பகவான் உச்ச ராசியான விருச்சிக ராசியிலிருந்து நட்பு ராசியான துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
இன்று ராகு பகவானின் நட்சத்திரமான சுவாதி நட்சத்திரம் இருக்கிறது.
கேது பகவானின் அதிதேவதை என்று அழைக்கக்கூடிய விநாயகப் பெருமானின் திதியான சங்கடகரசதுர்த்தி இன்று அமைந்திருக்கிறது.
இதனால் இன்று சம்ஹார பைரவர் மந்திரத்தை ஜெபிக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கும்
பீஷண பைரவர் மந்திரத்தை ஜெபிக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கும் மிகவும் அளவற்ற புண்ணியம் கிடைக்கும்.
இதனால் இன்று நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி மிகவும் அபூர்வமான ராகு கேது பெயர்ச்சி ஆக மாறுகிறது.
இன்று வரை யூ டியூப்பிலும் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் நேரடியாக ஜோதிடர்கள் மூலமாகவும் ராகு கேது பெயர்ச்சி பற்றி ஏகப்பட்ட தகவல்களை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இதனால் குழப்பமே மிஞ்சும் .
மிகவும் எளிமையான அதேசமயம் சக்தி வாய்ந்த ஒரு வழிபாட்டு முறையை நமக்கு ஒரு ஆன்மீக ஆராய்ச்சியாளர் உபதேசமாக தெரிவித்துள்ளார்.
இது பைரவப் பெருமானின் கருணையால் நமக்கு கிடைத்துள்ளது.
ராகு கேது பெயர்ச்சி ஆகும்போது பாதிப்புக்குள்ளாகும் அந்த ராசியை சேர்ந்த அன்பர்கள் அதற்குரிய பைரவ காயத்ரி மந்திரத்தை அல்லது பைரவ மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.
அப்படி ஜெபித்தால் அடுத்த ராகு-கேது பெயர்ச்சி வரை (இன்று முதல் 18 மாதங்கள் வரை) அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்பது மட்டும் உறுதி.
உதாரணமாக மேஷ ராசியில் பிறந்தவர்கள் இன்று 21.3. 2022 திங்கட்கிழமை மதியம் 3.09 ஐ நேரத்தை மையமாகக்கொண்டு (மதியம் 2.39 முதல் 3.39 வரை) ராகுபகவானின் பிராண தேவதை என்று அழைக்கக்கூடிய சம்கார பைரவர் மந்திரத்தை அல்லது சமஹார பைரவர் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.
ஓம் ஹ்ரீம் பம் சம்ஹார பைரவாய நமஹ
அல்லது
ஓம் மங்களேசாய வித்மஹே
சண்டிகா ப்ரியாய தீமஹி
தன்னோ சம்ஹார பைரவ ப்ரசோதயாத்
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே மஹாதேவி ச தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்
துலாம் ராசி அன்பர்கள் கேது பகவானுக்குரிய பிராண தேவதையான பீஷண பைரவரின் மந்திரத்தை அல்லது பீஷண பைரவர் காயத்ரி மந்திரத்தை (இன்று 21.3.2022 மதியம் 2.39 முதல் 3.39 வரை)ஜெபிக்க வேண்டும்.
ஓம் ஹ்ரீம் பம் பீஷண பைரவாய நமஹ
அல்லது
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
சர்வானுக் ராய தீமஹி
தன்னோ பீஷணபைரவ ப்ரசோதயாத்
ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்
ஒரு மணி நேரம் ஜெபித்து வர வேண்டும் .
அவ்வாறு ஜெபித்து வருவதன் மூலமாக அடுத்த 18 மாதங்களுக்கு மேஷ ராசி அன்பர்களும்
துலாம் ராசி அன்பர்களும் ஆழ்ந்த மன நிம்மதி அடைவார்கள் என்பது சர்வ நிச்சயம்.
எனவே இன்று என்ன வேலை நடந்தாலும் அதை கொஞ்சம் தவிர்த்து விட்டு ஒரு மணிநேரம் அதற்குரிய மந்திரத்தை ஜெபித்து வருவது நன்று.
அது முடியாதவர்கள் இன்று மதியம் 2.59 முதல் மதியம் 3.19 வரை மட்டுமாவது உரிய பைரவர் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வருவது அவசியம் .
மேஷ ராகு பெயர்ச்சியால் மேஷம், மீனம், கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு பகவானால் அதிகபட்ச பாதிப்பு உண்டாக கூடிய சூழ்நிலை தெரிகிறது .
துலாம் கேது பெயர்ச்சியால் துலாம், கும்பம், மீனம்,சிம்மம் மற்றும் மிதுன ராசிக்காரர்களுக்கு கேது பகவானால் அதிகபட்ச பாதிப்பு உண்டாக கூடிய சூழ்நிலை தெரிகிறது.
இந்த நிலையை பெருமளவு குறைப்பதற்காக குருவின் அருளால் இந்த நவக்கிரக பைரவர் பிராண தேவதை மந்திரங்களை தங்களுக்கு தெரிவிக்கின்றோம்.
சிவராஜயோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
9629439499
ராஜபாளையம்.