இன்று திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி

19

ஜோதிட ரீதியாக கிரக பெயர்ச்சிகளில் முக்கியமானதாக கருதப்படுவது, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இம்மூன்று பெயர்ச்சியே ஜோதிட ரீதியாக மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய பெயர்ச்சியாக உள்ளது.

மற்ற கிரகங்கள் சுற்றி வந்து தன்னை நிலை நிறுத்திக்கொள்ள கூடிய காலக்கட்டம் குறைந்த நாட்கள், மாதங்கள் என உள்ளது.

மேற்கண்ட மூன்று பெயர்ச்சிகளுமே ஒரு வருடம் , ஒன்றரை வருடம், இரண்டரை வருடம் என்ற ரீதியில் உள்ளது.

ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடக்கிறது. தற்போது மிதுனத்தில் உள்ள ராகு ரிஷப ராசியை நோக்கி செல்கிறது. கேது விருச்சிகத்துக்கு செல்கிறது. இந்த ராகு கேது பெயர்ச்சியால் தற்போதுள்ள கொரோனா சூழ்நிலை மறையும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராகு கேது பெயர்ச்சியை பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். இதனால் உலகத்தில் மாற்றங்கள் ஏற்படாதா என மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

ஜோதிடர்களால் இரண்டு பஞ்சாங்கங்கள் கடைபிடிக்கப்படுகிறது. ஆதிகாலத்தில் கடைபிடிக்கப்பட்ட பஞ்சாங்கம்தான் வாக்கிய பஞ்சாங்கம் கோவில்களில் நடக்கும் பெயர்ச்சி விழாக்கள் வாக்கியத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதன்படியே நடந்து வருகிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த சில தவறான விசயங்கள் களையயப்பட்டு அப்டேட்டாக புதியதாக வந்ததுதான் திருக்கணித பஞ்சாங்கம்  ஆகும். திருத்தி எழுதப்பட்ட பஞ்சாங்கம் என்பதே திருக்கணித பஞ்சாங்கம் என்பது ஜோதிடர்கள் சிலரின் கருத்து.

இணையதளங்கள், ஜோதிட சாஃப்ட்வேர்கள் பலவற்றில் திருக்கணித பஞ்சாங்கமே பயன்படுகிறது. மேலும் இதை காஞ்சி மஹா பெரியவரே திருக்கணித பஞ்சாங்கத்தை விரும்பி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

வாக்கிய பஞ்சாங்கப்படி கடந்த செப்டம்பர் 1ம்தேதியே ராகு கேது பெயர்ச்சியாகி விட்டது.  திருக்கணித பஞ்சாங்கப்படி இன்றுதான் ராகு கேது பெயர்ச்சி என கூறப்படுகிறது.

பாருங்க:  ”கொரொனா” தமிழ்நாட்டினின் நிலவரம் - சுகாதாரத்துறை செயலாளரின் அப்டேட்

எந்த பஞ்சாங்கமாக இருந்தாலும் சரி ராகு கேது பெயர்ச்சியால் ஒரு மாற்றம் ஏற்பட்டு அதன் மூலம் உலக மக்களுக்கு நன்மை நடந்தால் சரிதான் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.