பிரதோஷம் என்பது 13 நாட்களுக்கு ஒருமுறை வரும் சிவனுக்குரிய முக்கிய விழாவாகும். இந்த நாளில் உலகெங்கும் உள்ள சிவாலயங்கள் அனைத்திலும் சிவன், நந்திக்கு விசேஷ பூஜை நடைபெறும்.
சிவனுக்குரிய முக்கிய நிகழ்வான பிரதோஷ பூஜை , பிரதோஷ நாளன்று மாலை 4.30 முதல் 6 மணி வரை நடைபெறும்.
சிவ வழிபாடு என்பது உள்ளும் புறமும் ஞானத்தை கொடுக்க கூடியது என்பார்கள் தொடர்ந்து சிவ வழிபாடு செய்ய செய்ய நல்ல ஞானம் நமக்கு உண்டாகும்.
தொடர் பிரதோஷ வழிபாடுகளில் நாம் கலந்துகொள்ளும்போது, நமது மனச்சிக்கல், பணச்சிக்கல், திருமணம் நடக்காமல் இருப்பது, குழந்தை இல்லாமல் இருப்பது போன்ற அனைத்து தோஷங்களிலும் இருந்து விடுபட்டு நற்பேறு அடைவது உறுதியாகும்.
இன்று சிவன்கோவில்களில் நடைபெறும் பிரதோஷ விழாவில் கலந்து நல்ல நிலையை அடைவோம்.