Latest News
இன்று வராஹிக்கு உகந்த பஞ்சமி- என்றும் மன நிம்மதியை தரும் வராஹி மந்திர வழிபாடு
சர்வசக்தி வாய்ந்த ஆன்மீக பாதுகாப்பை வழங்கும் மந்திர லிகிதம்!!!
உங்களுடைய தினசரி வாழ்க்கை நிம்மதி இல்லாமல் இருக்கிறதா?
அல்லது
உங்களுடைய டீன்ஏஜ் குழந்தைகள் எந்த ஒரு தேவையில்லாத சிக்கலில் மாட்டாமல் இருந்து (நிம்மதியாக) டீன் ஏஜ் பருவத்தை கடக்க வேண்டுமா?
ஆம் என்றால் நீங்கள் மூன்று சுய கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
1. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அசைவம் சாப்பிடக்கூடாது. (முட்டை சைவ உணவு அல்ல .அசைவ உணவு தான்!!!)
2 .அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மது அருந்தக்கூடாது.
3. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்படி ஒரு மந்திரம் தினமும் இரவில் 108 முறை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று யாரிடமும் சொல்லக்கூடாது.
தாம் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்து கொண்டு வாழ்ந்தாலும் கூட நம்முடைய வேலை அல்லது தொழில், தனித்திறமை மற்றும் பிரபல யோகம் நமக்கு அருகில் வாழ்ந்து வருபவர்களில் பலருக்கு பிடிப்பதில்லை.
அவர்கள் நம்முடன் பழகிக்கொண்டே நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்துகொண்டு நம்முடைய ஆன்மீக முயற்சிகளை தடுக்கும் மாந்திரீக கெடுதிகளை விடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் .
இருந்த போதிலும் நாம் அதை நம்புவது கிடையாது.
அதை நம்பினாலும் அதிலிருந்து மீள்வதற்கான வழி ஒரு சிலருக்குத்தான் கிடைக்கிறது .
அப்படி ஒரு எளிய வழி தான் வராகி மந்திரம் தினமும் இரவில் 108 முறை எழுதி வருவது !!!
18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் இந்த மந்திரத்தை எழுதலாம் .
மூன்று ஆண்டுகள் வரை எழுத வேண்டும் .
பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் தாய்மார்கள் இல்லத்தரசிகள் மாதவிலக்கு நாட்களில் எழுதக்கூடாது; சிகப்பு மையால் ஒரு போதும் எழுதக்கூடாது; கருப்பு அல்லது நீல நிற மையால் எழுதுவது நன்று .
எழுதி முடித்த நோட்டுகளை வீட்டில் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
நம்முடைய ஆன்மீக தமிழ்நாட்டில் ஏராளமான ரகசிய இறை வழிபாட்டு முறைகள் உண்டு.
அவற்றில் பல முறைப்படி குருவின் வழிகாட்டுதல் மூலமாக நேரடி உபதேசம் வழியாகவே கிடைக்கும்.
இங்கே சொல்வது நிம்மதியாக வாழ விரும்பும் யார் வேண்டுமானாலும் மேலே கூறப்பட்டுள்ள மூன்று சுய கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றி மந்திரம் எழுதி வரலாம்.
ஓம் ஐம் க்லெளம் சிவ பஞ்சமியை நமஹ
கடந்த பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் இந்த மந்திர லிகிதம் எழுதி படிப்படியாக நிம்மதியான வாழ்க்கையை பலர் பெற்றுள்ளார்கள்.
சிவராஜயோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
9629439499
ராஜபாளையம்.
