Entertainment
இன்று ஓணம் பண்டிகை
இன்று கேரளாவில் புகழ்பெற்ற ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றுதான் ஓணம் பண்டிகை. இந்த ஓணம் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மக்கள் அனைவரும் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து கொண்டாடும்படி கேரள அரசு அறிவிறுத்தியுள்ளது. கூட்டமாக கூடி ஒன்று சேர்வதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு ஊழியர்களுக்கு ஓணம் கொண்டாடும் வகையில் 15000 எளிய தவணையில் செலுத்தும் வகையில் கடன் பணம் வழங்கப்பட்டுள்ளது.
ஓணம் கொண்டாடுவதையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து கூறியுள்ளார்.
தொடர்ந்து தொல்லை தரும் தொற்று நோய்களும் படிக்கும்போதே பதை பதைப்பு ஏற்படுத்தும் பட்ஜெட்டுகளும் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியும் இறங்கு முகத்தில் இருக்கும் வருமானமும் வாட்டி கொண்டிருக்கும் வேளையில்,
பண்டிகைகளும் நம்பிக்கைகளும் தான் நம் நம்பிக்கைகளை உலர்ந்து விடாமல் ஈரப்படுத்தி கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் வாழ்கின்ற கேரள மக்களும், கேரளத்தில் வாழுகின்ற தமிழ் மக்களும், சகோதர வாஞ்சையோடு மகிழ்ந்து கொண்டாடும், மகத்தான திருவிழா ஓணம் பண்டிகை. என பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.