Latest News
திருப்பதி கோவிலில் இலவச டிக்கெட்டுகள் இன்று முதல் நேரடி விநியோகம்
கடந்த 2020 ம் ஆண்டு கொரோனா வந்த காலத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கடும் கட்டுப்பாடுகள் வந்தன.
அதில் ஒன்றுதான் இலவச தரிசன சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொறுட்டு இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
பிறகு எல்லாம் சரியாகி இலவச தரிசன சேவை பின்பு ஆரம்பம் ஆனாலும் இலவச டிக்கெட்டுகள் நேரடியாக கொடுக்கப்படவில்லை ஆன்லைன் பதிவேற்றங்கள் தான் இருந்தன.
இது போல குழப்பங்களால் பாமரத்தனமான பக்தர்களுக்கு ஸ்வாமி தரிசனம் செய்வதில் சிக்கல் இருந்தது.
இந்த நிலையில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன்கள் நேரடியாகவே திருப்பதியில் கொடுக்கப்படுகின்றன.
இன்று முதல் நிவாசம் விடுதி, கோவிந்தராஜர் சத்திரம் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் தனி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஆதார் அட்டையை கொண்டு வந்து பக்தர்கள் இந்த வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.