Latest News
இன்று சதுர்த்தி- மாந்த்ரீக ரீதியான பாதிப்பு இருந்தால் விநாயகரின் இந்த மந்திரத்தை இன்று ஜெபிக்கலாம்
மாந்திரீக தாக்குதல்களை தடுத்து நிறுத்த உதவும் கணபதி மந்திரம்!!!
உங்களில் பலருக்கு பல்வேறு விதமான மாந்திரிக பாதிப்புகள் அவ்வப்போது உண்டாகின்றன.
ஆனால் இதை நம்மில் பலர் நம்புவது கிடையாது.
தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் நம்மில் பலர் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
நாம் நேர்மையாக வாழ்ந்து விட்டால் நமக்கு யாரும் எந்த தீமையும் செய்ய முடியாது .
நம்முடைய நேர்மை மற்றும் உண்மையான வாழ்க்கை எந்த ஒரு மாந்திரிக பிரச்னையும் நமக்கு தராது என்று நம்புகிறோம். அது தவறு .
நம்மை சுற்றியுள்ள மனிதர்களில் பலர் எதற்கெடுத்தாலும் பொறாமைப்படுகிறார்கள் .
குறிப்பாக அவர்கள் தன் வாழ்க்கையில் முன் வருகிறார்களோ இல்லையோ நாம் நன்றாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அடிக்கடி மாந்திரீகம் ஏவி விடுகிறார்கள் .
இது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
ஏனென்றால் மாந்திரீக பிரச்சனையை தீர்த்து வைக்கும் உண்மையான ஆன்மீகவாதிகள் இப்போதைய காலகட்டத்தில் மிகவும் குறைந்து கொண்டே இருக்கிறார்கள்.
இதற்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய முன்னோர்களாகிய சித்தர்கள் வழிமுறையை கண்டு பிடித்து விட்டார்கள் .
அந்த வழிமுறைகளில் ஒன்றுதான் அஷ்ட கணபதியின் அருளைப் பெறும் முயற்சி!!!!
சித்தர்களின் தலைவரும் தமிழ் மொழியின் தந்தையும் என்று அழைக்கப்படக்கூடிய அகத்தியர் நம் ஒவ்வொருவருக்கும் ஆதிமூல முதல் குரு ஆவார் .
அவர் எட்டு விதமான கணபதி அவதாரங்களுக்கு ஒரே ஒரு மூலமந்திரத்தை நமக்காக சிவபெருமானிடம் இருந்து உபதேசம் பெற்று கொடுத்திருக்கிறார் .
இந்த மந்திரத்தை ஜெபிப்பதற்கு எந்த ஒரு உணவு கட்டுப்பாடு கிடையாது.
பெரும்பாலான உக்கிரமான ஆண் தெய்வங்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும் மந்திரம் ஜெபிப்பதற்கு முறைப்படி தீட்சை வாங்க வேண்டும் .
மந்திரம் சித்தி ஆகும் வரை அசைவம் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது .
மது அருந்தக் கூடாது.
ஒரு சில மந்திரங்களுக்கு தாம்பத்திய கட்டுப்பாடுகளும் உண்டு.
ஆனால் எந்த ஒரு கணபதி அவதார மந்திரத்தையும் ஜெபம் செய்வதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது.
பின் வரும் மந்திரத்தை 6.3. 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி திதி அன்று ஜெபிக்க ஆரம்பிக்கலாம் .
உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள்.
விநாயகர் சன்னதியில் ஒன்பது தோப்புக்கரணம் போடுங்கள். ஒரு அருகம்புல் மாலை வாங்கி அவருக்கு அணிவியுங்கள் கோயில் பூசாரிக்கு ரூபாய் இருபத்தி ஒன்று தட்சணை கொடுங்கள். வசதியுள்ளவர்கள் தேங்காய் பழம் உடைக்கலாம் .அபிஷேகம் செய்யலாம் அன்னதானம் செய்யலாம் கொழுக்கட்டை தானம் செய்யலாம்.
அதன் பிறகு உங்கள் இரண்டு கைகளால் தலையை கூட்டிக் கொள்ளுங்கள்.
” முழுமுதற் கடவுளே!
அடியேனுக்கு கணபதி மந்திரம் உபதேசம் செய்வதற்கு தகுந்த குரு கிடைக்கவில்லை.
எனவே தாங்களே குருவாக இருந்து இந்த மந்திரத்தை அடியேனுக்கு உதவி செய்யும்படியும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் ”
என்று அவர் முகம் பார்த்து வேண்டிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு பின்வரும் மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பிக்கவேண்டும்.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் வீட்டில் உள்ள விநாயகர் ஃபோட்டோ முன்பாக இவ்வாறு பிரார்த்தனை செய்து ஜெபிக்க ஆரம்பிக்கலாம்.
அதுவும் இல்லாதவர்கள் இணையத்தில் உள்ள விநாயகர் ஃபோட்டோ ஒன்றை பார்த்தவாறு ஆரம்பிக்கலாம்.
ஓம் கிலி அங் உங்
என்பதுதான் அந்த மந்திரமாகும் .
இந்த மந்திரத்தை பகல் மற்றும் இரவில் போது வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்!
இந்த மந்திரம் ஜெபிப்பதற்கு அசைவம் சாப்பிடக் கூடாது மது அருந்தக் கூடாது என்று எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
குளிக்கும் போது
சாப்பிடும் போது
ஆடை அணியும் போது
படுத்திருக்கும் போது
நடக்கும் போது
பேருந்தில் பயணம் செய்யும் போது
டிவி பார்க்கும் போது
திரைப்படம் பார்க்கும் போது
எழுதும்போது
என்று எப்போது வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.
சீக்கிரம் இந்த மந்திரம் ஸித்தியாக விரும்புபவர்கள் இது போன்று காலையில் தூங்கி எழுந்தது முதல் இரவில் தூங்கும் வரை எப்போது வேண்டுமானாலும் ஜெபித்துக் கொண்டே இருக்கலாம்.
முறைப்படி ஜெபிக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் 5 மணி முதல் 6 மணி வரை உங்கள் வீட்டு பூஜை அறையில் அல்லது தனி அறையில் ஒரு புதிய துண்டு விரித்துக் கொள்ள வேண்டும்.
அதன் மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்.
அருகில் நெய் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.வாசமுள்ள பத்தி பொருத்தி இருக்க வேண்டும்.
உங்கள் முன்பாக கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி ஏதாவது ஒரு விநாயகருடைய போட்டோ இருக்க வேண்டும் .
சிலர் மிகச்சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து இருப்பார்கள் அதுவும் இருக்கலாம்.
ஜெபித்து முடித்தவுடனே விரிப்பை எடுத்து மடித்து வைக்க வேண்டும். அதை வேறு எதற்காகவும் பயன்படுத்தக்கூடாது.
அந்த விரிப்பை துவைக்கக்கூடாது.
விநாயகர் மந்திரம் ஜெபிக்கும் நாட்களில் நெருங்கிய உறவுகளில் நடைபெறும் துக்க நிகழ்வில் கலந்து கொள்ளலாம்; சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்;
உதாரணமாக வயதானவர்களின் மரணம் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் குழந்தை பிறப்பு மற்றும் பூப்புனித நீராட்டு விழா என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்கலாம் எந்தவித தீங்கும் கிடையாது.
5 வயது முதல் 100 வயது வரை உள்ள ஆண் பெண் யாராக இருந்தாலும் எந்த ஜாதி மதம் இனம் மொழியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த மந்திரம் ஜெபிக்கலாம் எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது.
2 ஆண்டுகள் இவ்வாறு தினமும் ஜெபித்து வருவதன் மூலமாக இந்த அஷ்ட கணபதி மந்திரம் சித்தி ஆகிவிடும்.
காலையில் தூங்கி எழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கனவில் விநாயகர் தொடர்புடைய ஒரு காட்சி தெரியும் .
அதுதான் இந்த மந்திரம் உங்களுக்கு சித்தி ஆனதற்கு அடையாளம் ஆகும் .
அதன்பிறகு இந்த பிறவி முழுவதும் நீங்கள் எந்த ஒரு மாந்திரிக பாதிப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.
உங்களுக்கு
உங்களுடைய குடும்பத்தாருக்கு
உங்களுடைய சொத்துக்களுக்கு
உங்களுடைய தொழிலுக்கு
உங்களுடைய அரசு அல்லது தனியார் வேலைக்கு
முழு பக்கபலமாக
முழுமுதற் கடவுள் கணபதி சூட்சுமமாக பாதுகாப்பு தருவார் .
கடந்த பல நூற்றாண்டுகளாக இம்மந்திரத்தை சித்தியடைந்து ஆயுள் முழுவதும் நிம்மதியாக வாழ்ந்தவர்கள் பல லட்சம் பேர்.
சிவராஜயோகம் ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
9629439499
ராஜபாளையம்
