cinema news
பீஸ்ட் டிரெய்லரை எதிர்பார்த்து ரசிகர்கள்- இன்று வெளியாகிறது பீஸ்ட் டிரெய்லர்
தமிழ் சினிமாவில் அஜீத், விஜய் ரசிகர்களுக்கு இருக்கும் கூட்டமே தனிதான். தங்கள் நடிகர்களின் படங்கள் வந்தால் அமர்க்களப்படுத்தி விடுவார்கள். தற்போதுதான் வலிமை செலிப்ரேஷனை முடித்து அஜீத் ரசிகர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.
அடுத்ததாக விஜய் ரசிகர்கள் ஏப்ரல் 14ம் தேதி பீஸ்ட் வெளியாவதை ஒட்டி அமர்க்களப்படுத்த இருக்கிறார்கள்.
அதற்கு முன்னேற்பாடாக இன்று மாலை 6 மணிக்கு விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது.
நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.