Connect with us

TNTET 2019 – ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு!

TNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வு

Tamil Flash News

TNTET 2019 – ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு!

ஆசிரியர் தகுதி தேர்வான TET தேர்வுக்கு விண்ணபிக்கும் கடைசி தேதி 05-04-2019 என்று அறிவித்திருந்த நிலையில், விண்ணப்பிக்க கடைசி நாள் 12-04-2019 என கால அவகாசம் கொடுத்து நீடித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளை எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

1 முதல் 5ம் வகுப்பு வரை பாடங்கள் எடுக்க முதல் தாள் எழுத வேண்டும், அதற்கு தகுதியாக 12ம் வகுப்பில் 50 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும், 6 முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக்க இரண்டாம் தாள் தேர்வினை எழுத வேண்டும், அதற்கு தகுதியாக பட்டப்படிப்பில் 45 சதவீதம் எடுத்திருக்க வேண்டும்.

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இன்று ( 05-04-2019 ) என தெரிவித்திருந்த நிலையில், 3 லட்சத்து 63 ஆயிரம் பேர் இதுவரை விண்ணப்பித்து இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (05-04-2019) வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுத் தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் www.trb.tn.nic.in மூலம் விண்ணப்பிக்க 15-03-2019 முதல் 5-04-2019 மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது.

தற்போது ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்கும் நாட்களை நீடித்து தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வந்த நிலையில், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் 12 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

பாருங்க:  சர்வதேச கபடி வீரர் சுட்டுக்கொலை- பஞ்சாப் பயங்கரம்

More in Tamil Flash News

To Top