Tamil Flash News
இளம்பெண் சுபஸ்ரீ மரணம் – தலைமறைவாக இருந்த முன்னாள் கவுன்சிலர் கைது
சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது விழுந்தது.
இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி மரணமடைந்தார். இந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இனிமேல் பேனர் வைக்க வேண்டாம் என பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளன.
ஆனால், அந்த பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தலைமறைவானதால் அவரை கைது செய்யமுடியவில்லை என நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர். இதற்கு நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது. எனவே, அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அவரை கிருஷ்ணகிரியில் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.