கொரோனாவை முன்னிட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனது வீட்டில் வாங்கிய பால் திரிந்துவிட்டதாக புகார் அளித்த எஸ் வி சேகருக்கு மாற்றுப் பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
நடிகரும் பாஜகவின் பிரமுகருமான எஸ்வி சேகர் சமீபத்தில் தனது டுவிட்டரில் ’இன்று காலை வாங்கிய ஆவின் பால் 13 பாக்கெட்டுகளில் 9 பாக்கெட்டுகள் பால் குக்கரில் காச்சும் போது திரிந்து விட்டது. வீட்டில் 90 வயது தாயார் 7 வயது 2 வயது குழந்தைகள் உள்ளது. நான் என்ன செய்வது’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் அந்த டிவிட்டில் தமிழக முதல்வரின் அதிகாரப் பூர்வப் பக்கத்தையும் டேக் செய்து இருந்தார். எஸ்வி சேகரின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்கள் கிண்டலுடன் கூடிய கமெண்டுக்களை பதிவு செய்திருந்தனர்.
எஸ் வி சேகரின் டிவிட்டைப் பார்த்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதுகுறித்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் எஸ் வி சேகர் ‘நான் தங்களுக்கு பதிவு பண்ணிய 3 மணி நேரத்துக்குள் 9 புதிய double toned பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கு வந்து மாற்றிக்கொடுத்து சென்றார். தங்களுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்’ என எஸ்வி சேகர் குறிப்பிட்டிருந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூகவலைதளங்களில் எஸ் வி சேகருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல கருத்துகள் எழுந்துள்ளன.

