Tamil Flash News
புல்வாமா தாக்குதல் – தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் புல்வாமா எனும் இடத்தில் பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த தாக்குதலில் சிவசந்திரன் மற்றும் சுப்பிரமணியன் என இரு தமிழக வீரர்களும் பலியாகினர். இதில் சுப்பிரமணியன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் சவலப்பேரி கிராமத்தை சேர்ந்தவர். சிவசந்திரன் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்தவர்.
இவர்களின் மரணம் அவர்களின் குடும்பத்தினருக்கும், கிராமத்தினருக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்கள் இருவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.