cinema news
ஆக்சிஜன் தடைபட்டு நோயாளிகள் இறந்த விவகாரம்- ஸ்டாலின் கடும் கண்டனம்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று திடீரென மின்சாரம் தடைபட்டது. தொடர்ந்து சில மணி நேரங்கள் மின்சாரம் வராத சூழ்நிலை நிலவியது. இதனால் வெண்டிலேட்டர் உதவியுடன் ஆக்சிஜன் செலுத்தப்பட்ட இரு நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அரசு மருத்துவமனையை பார்வையிட்டு பின்பு பேட்டியளித்த மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன். அரசு மருத்துவமனையில் வேலை நடைபெற்று வந்தது அந்த காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என கூறினார்.
வேலை செய்து கொண்டிருந்தபோது மின் வயர் துண்டிக்கப்பட்டதாலேயே இது நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தன் கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்.
திருப்பூர் அரசு மருத்துவமனை ICU-வில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மருத்துவமனையை நம்பியவர்களின் கொடூர மரணங்கள் இவை!
ஆட்சியின் இலட்சணம் இது!
கொரோனா மரணங்கள் தவிர அரசின் அலட்சிய மரணங்களும் அதிகரித்து, மக்களைக் கொல்லும் அரசாக மாறிவிட்டது! என ஸ்டாலின் கூறியுள்ளார்.