டிக் டாக் வங்கி கணக்குகளை முடக்கிய இந்திய அரசு

42

பிரபல சீன செயலியான டிக் டாக் சில நாட்கள் முன்பு தடை செய்யப்பட்டது. டிக் டாக் நிறுவனம் எவ்வளவோ கேட்டும் இந்திய அரசு அதன் மீதான தடையை நீக்கவில்லை. சீனா நம்முடன் நீண்ட நாளாக கடைபிடித்து வரும் மோதல் போக்கும் இதற்கு ஒரு காரணம். பல சீன செயலிகள் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதியது.

இதனால் சீன செயலிகளை தடை செய்யும் நோக்கில் டிக் டாக்கையும் தடை செய்தது இந்திய அரசு.

தற்போது டிக் டாக்கின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது இந்திய அரசு.டிக் டாக் நிறுவனம்  தடை செய்தாலும் அதன் ஊழியர்கள் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் 1300 பேர் இங்கு இருந்தபடியே வெளிநாடுகளில் உள்ள டிக் டாக் செயலிகளை கண்காணித்து வருகின்றனர்.

டிக் டாக்கை சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனம் ஆன்லைன் விளம்பர வருவாயில் மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் டிக் டாக்கின் இரண்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதை எதிர்த்து பைட்டான்ஸ் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

பாருங்க:  பிரதமர் மோடி பேச்சு வெற்றுப்பேச்சு- காங்கிரஸ் குற்றச்சாட்டு
Previous articleதலையை வெளியே நீட்டி வாந்தி எடுக்க முயன்ற சிறுமி- தலை துண்டாகி பலி
Next articleபிரச்சாரத்திற்கு வராத பாஜக வேட்பாளர்- கோபத்தில் கிளம்பி சென்ற நமீதா