திரெளபதி என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது ஞாபகம் இருக்கலாம். இதை இயக்கியவர் மோகன் ஜி என்ற இயக்குனர். இந்த படத்தில் நடிகர் ரிச்சர்ட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஜாதி ரீதியான காதல் திருமணங்களில் உள்ள பிரச்சினைகளை இவரின் படத்தில் கதையாக வைத்திருந்ததால் ஒரு தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. எதிர்ப்பை மீறி படம் வெளிவந்தது படம் அவர்களே எதிர்பார்க்காத வகையில் வெற்றி பெற்றது.
க்ரெளட் பண்டிங் முறையில் பணம் வசூல் செய்யப்பட்டு இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் இயக்குனர் சொல்ல வந்த ஜாதி ரீதியான கருத்துக்களுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி இப்படத்தின் ட்ரெய்லரையே அதிகம் பேர் பார்த்திருந்தனர்.
இந்த நிலையில் இப்பட இயக்குனர் மோகன் ஜி தனது அடுத்த பட அறிவிப்பை ஆயுத பூஜையான வரும் ஞாயிற்றுக்கிழமையன்று அறிவிக்கிறார்.
பிரபாகரனின் அதிரடி ஆட்டம் என்று கேப்சன் கொடுக்கப்பட்டுள்ளது படத்தின் பெயர் என்னவென்று ஞாயிற்றுக்கிழமை தெரியும்.