த்ரிஷ்யம் 3 கதை எதுவும் அனுப்பாதீங்க- ஜீத்து ஜோசப் வேண்டுகோள்

த்ரிஷ்யம் 3 கதை எதுவும் அனுப்பாதீங்க- ஜீத்து ஜோசப் வேண்டுகோள்

த்ரிஷ்யம் திரைப்படம் கடந்த 2013ல் மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. தென்னக மொழிகள் அனைத்திலும் இப்படம் ரீமேக்கப்பட்டது.

மோகன்லால் மீனா நடித்திருந்த இப்படம் மீண்டும் த்ரிஷ்யம் 2 வாக வந்து அதுவும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் த்ரிஷ்யம் 3 படத்திற்கான கதையை ஜீது ஜோசப் கேட்கிறார் என தகவல் பரவி அவரது  மெயிலுக்கு கதைகள் வந்து குவிந்து விட்டனவாம்.

அடுத்த ஒரு மெயில் வர முடியாத அளவுக்கு அவர் இன்பாக்ஸ் நிறைந்து விட்டதாம். இது குறித்து ஜீது ஜோசப் கூறுகையில்

நான் ‘த்ரிஷ்யம் 3’ படத்துக்கான கதையைத் தேடி வருவதாக சில நாட்களாக சமூக ஊடகங்களில் எனது மின்னஞ்சலுடன் ஒரு புரளி உலவி வருகிறது. ஆனால் இது பொய்யான செய்தி. மற்றவர்களிடமிருந்து கதைக்கான யோசனை கேட்கும் எண்ணம் எனக்கு இல்லை.

மற்ற கதைகளைப் பற்றி விவாதிக்கவும், நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அணுகவும் அந்த மின்னஞ்சலை நான் பயன்படுத்துகிறேன். ஒரு வானொலிப் பேட்டியில் அந்த முகவரியைச் சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது என்ன பிரச்சினை என்றால் எனது மின்னஞ்சல் பெட்டி நிறைந்துவிட்டது.

புதிய மின்னஞ்சல்கள் வர இடமில்லை. எனவே த்ரிஷ்யம் 3க்கான கதை எதையும் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என ஜீது ஜோசப் கூறியுள்ளார்.