ஓடிடியில் வெளியாகும் த்ரிஷ்யம் 2

28

மோகன்லால் மீனா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் த்ரிஷ்யம். இந்த படத்தில் மோகன்லால் மீனா நடித்திருந்தனர் ஜீது ஜோசப் இயக்கி இருந்தார். இந்த படம் அடுத்த இரண்டு வருடங்களில் தென்னக மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழில் கமல் நடிக்க  பாபநாசம் என்ற பெயரில் வெளிவந்து இங்கேயும் கல்லா கட்டியது இந்த படம்.

ஹிந்தியில் மட்டும் இப்படம் தோல்வியடைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 என்ற பெயரில் கடந்த வருடம் தொடங்கியது.

த்ரிஷ்யம் 1ல் நடித்தவர்களே இப்படத்தில் நடித்தனர்.

இப்படத்தின் பணிகள் முடிக்கப்பட்டு வரும் பிப்ரவரி 15ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/NewsJTamil/status/1357231200499245057?s=20

பாருங்க:  சூப்பர் ஸ்டார் படத்துக்கு ஒன்றாக புறப்பட்ட மீனா, குஷ்பு