காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சார்மி. இவர் தமிழில் நடித்த படங்களுக்கு பிறகு தெலுங்கில் தான் முன்னணி நடிகையாக ஆனார். நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை த்ரிஷா இவருக்கு நீண்ட வருடமாக திருமணமாகாத நிலையில் இவர் திருமணம் குறித்து சார்மி என்ன சொல்கிறார் என பார்ப்போம்.
த்ரிஷா சமீபத்தில் தனது பிறந்த நாள் கொண்டாடினார் அதை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த சார்மி, த்ரிஷா பேச்சுலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் த்ரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று தெரிகிறது. ஆனால் த்ரிஷா இதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
த்ரிஷாவும் சார்மியும் பெளர்ணமி, கிங் போன்ற தெலுங்கு படங்களில் ஒன்றாக நடித்ததுடன் இவர்கள் இருவரும் நீண்டகால தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.