cinema news
நான் இயங்க தயாராகி விட்டேன் – கொரோனாவில் குணமடைந்த த்ரிஷா
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை த்ரிஷா தற்போது குணமடைந்துள்ளார்.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை த்ரிஷா தற்போது குணமடைந்துள்ளதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நெகட்டிவ்’ என்ற வார்த்தையை கேட்டவுடன் இதுவரை நான் மகிழ்ச்சியடைந்ததே இல்லை. ஆனால் தற்போது முதன் முதலாக மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. இப்போது நான் 2022-ல் இயங்க நான் தயாராகிவிட்டேன்” என பதிவிட்டுள்ளார்.