Tamil Flash News
பசுமாட்டை பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர்கள் – திருப்பூரில் அதிர்ச்சி
பசுமாட்டை வாலிபர்கள் சிலர் பாலியல் வன்புணர்வு செய்து வந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பெருமாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி கந்தசாமி. இவர் வளர்த்து வந்த பசுமாடு அடிக்கடி உடல் நலம் பாதித்து அவதிப்பட்டு வந்தது. அதுவும் இரவில் நன்றாக இருக்கும் மாடு காலையில் பலவீனமாக இருந்தது. இது கந்தசாமிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று பசுமாட்டை கட்டிவிட்டு கந்தசாமி உறங்க சென்றார். திடீரென ஏதோ சத்தம் கேட்டு முழித்து வெளியே வந்தார். அப்போது மாடு அங்கே இல்லை. எனவே, அவர் தேடிய போது அருகிலிருந்த கோழிப்பண்ணையில் 3 வாலிபர்கள் மாட்டை பாலியல் வன்புணர்வு செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் அருகே வசிப்பவர்களின் உதவியோடு அந்த மூவரையும் பிடித்து அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில் அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அருகிலிருந்த கல்குவாரியில் அவர்கள் வேலை செய்து வருபவர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.