cinema news
பாலா இயக்கும் புதிய திரைப்படத்தில் 3 ஹீரோக்கள் – ரசிகர்கள் கொண்டாட்டம்
இயக்குனர் பாலா இயக்கும் புதிய திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் 3 கதாநாயகர்கள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
விக்ரம் மகன் துருவை வைத்து ‘வர்மா’ படத்தை இயக்கினார் பாலா. ஆனால் படம் முடிந்த நிலையில், அப்படத்திலிருந்து அவரை தூக்கிவிட்டு, வேறு இயக்குனரை வைத்து அப்படம் ‘ஆதித்ய வர்மா’ என்கிற தலைப்பில் மீண்டும் எடுக்கப்பட்டது.
எனவே, பாலா ஆர்யா, அதர்வாவை வைத்து புதிய படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இடையில் சூர்யா பேரும் அடிபட்டது. அதோடு, நடிகர் ஆர்.கே.சுரேஷை வைத்து மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஜோஷப்’ திரைப்படத்தின் ரீமேக்காக அவர் இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால், தற்போது அது உண்மை இல்லை என தெரியவந்துள்ளது. சூர்யா, ஆர்யா, அதர்வா ஆகிய மூவரையும் வைத்து அவர் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இப்படத்திற்கான திரைக்கதை பணிகள் முடிந்துவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.