அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த தோப்பு வெங்கடாச்சலம் தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் எம்.எல்.ஏ.வாகவும், அம்மா பேரவை மாநில இணைச்செயலாளராகவும் இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். இவர் திடீரென கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர் தினகரனின் ஆதரவாளர் என முத்திரை குத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படாததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிகிறது. விரைவில் அவர் அதிமுகவிலிருந்து விலகி, தினகரனின் அமமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.