Latest News
திதி சூனியம் என்றால் என்ன ?
திதி சூனியம் என்றால் என்ன ?
விதியை வெல்லலாம் திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் என்பது ஒரு ஜோதிட பழமொழி ஆகும் .
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பிறந்த திதியை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.
தினமும் ஒரு திதி வரும்.
ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு அம்சங்கள் உண்டு
ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் உண்டு
இருந்தபோதிலும் ஒவ்வொரு திதி வரும் நாளில் ஒவ்வொரு விதமான ரூபங்களில் ஒவ்வொரு விதமான விநாயகர் அருள்பாலித்து வருகிறார்!!!
ஒவ்வொரு விநாயகருக்கும் உரிய மந்திரங்கள் உண்டு காயத்ரி மந்திரங்கள் உண்டு சக்கரங்கள் உண்டு .
நாம் ஒவ்வொரு விநாயகருக்கும் உரிய மந்திரங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும் .
ஒவ்வொரு திதி வரும் பொழுதும் அந்த திதி முழுவதும் அதற்கு உரிய கணபதி ஆவாகனம் ஆகிறார் .
அதற்குரிய கணபதியின் முறை பற்றி அறிந்து அவரை நாம் வணங்க வேண்டும் .
அது முடியாத பட்சத்தில் அந்த கணபதிக்கு உரிய காயத்ரி மந்திரத்தை மட்டுமாவது அறிந்து இருக்க வேண்டும்!
ஒவ்வொரு திதியிலும் அதற்குரிய விநாயகர் அவதாரத்தை ஜெபம் செய்து கடையை திறக்க வேண்டும்
இவ்வாறு திறந்து வியாபாரத்தை ஆரம்பித்தால் உட்கார்ந்த இடத்திலேயே கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் யோகம் தானாக தேடி வரும் .
ஏனென்றால் கணபதி என்றால் கணங்களின் பதி என்று ஒரு அர்த்தம் உண்டு
விநாயகர் என்றால் வினைகளை நீக்குபவர் அதாவது தடைகளை நீக்குவார் என்று அர்த்தம் .
ஜோதிடம் பற்றிய அடிப்படை உண்மைகள் பல நம்மில் பலருக்கு தெரியாமல் போய்விட்டன.
அவற்றில் மிகவும் முக்கியமானது திதி ஆகும் .
பிரதமை திதி உரிய விநாயகர் ஸ்ரீ பாலகணபதி
துவிதியை திதிக்குரிய கணபதி ஸ்ரீ தருண கணபதி
திரிதியை திதிக்கு உரிய விநாயகர் ஶ்ரீபக்தி கணபதி
சதுர்த்தி திதிக்கு உரிய விநாயகர் ஸ்ரீ வீர கணபதி
பஞ்சமி திதிக்குஉரிய விநாயகர்
ஶ்ரீ சக்தி கணபதி
சஷ்டி திதிக்கு உரிய விநாயகர்
ஶ்ரீதுவிஜ கணபதி
சப்தமி திதிக்கு உரிய விநாயகர் ஶ்ரீ துவிஜகணபதி
அஷ்டமி திதிக்கு உரிய விநாயகர் ஶ்ரீஉச்சிஷ்ட கணபதி
நவமி திதிக்கு உரிய விநாயகர்
ஸ்ரீ விக்ன கணபதி
தசமி திதிக்கு உரிய விநாயகர்
ஶ்ரீ ஷிப்ர கணபதி
ஏகாதசி திதிக்கு உரிய விநாயகர்
ஸ்ரீ ஹேரம்ப கணபதி
துவாதசி திதிக்கு உரிய விநாயகர்
ஸ்ரீ லட்சுமி கணபதி
திரயோதசி திதிக்கு உரிய விநாயகர்
ஸ்ரீ மகா கணபதி
சதுர்த்தசி திதிக்கு உரிய விநாயகர்
ஸ்ரீ விஜய கணபதி
அமாவாசை அல்லது பௌர்ணமி திதி கூடிய விநாயகர் ஶ்ரீ நிருத்த கணபதி
ஒவ்வொரு விநாயகர் அவதாரமும் நமது ஊரில் உள்ள கோயில்களில் இல்லை.
ஆனால் ஒவ்வொரு திதியிலும் நமது ஊரில் உள்ள பழைய கோயில் அல்லது புதிய கோயில் அல்லது தனியாக உள்ள விநாயகர் கோயிலில் அதற்குரிய விநாயகர் ஆவாகனம் ஆகிக்கொண்டு நமக்காக காத்துக் கொண்டிருப்பார்.
மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் எந்த ஒரு தெய்வ உபாசனை செய்தாலும் அந்த தெய்வத்தின் அருளாசியை பெற்றாலும் விநாயகர் அவதாரங்களில் ஒரு அவதாரத்தில் அருளாசியைப் பெற முயற்சி செய்ய வேண்டும்!!!
அதற்கு முறைப்படி ஏதாவது ஒரு விநாயகர் அவதாரத்தின் மந்திரத்தை தீட்சை பெற வேண்டும் .
உச்சிஷ்ட கணபதி மந்திரத்தை மட்டும் கண்டிப்பாக தீட்சை மூலமாக பெற்றிருக்க வேண்டும்.
மற்ற எந்த ஒரு கணபதி மந்திரத்தை முறைப்படி குரு முகமாக தீட்சை பெற வேண்டிய அவசியம் கிடையாது என்ற ஒரு கருத்து உண்டு.
ஏன் என்றால் கலியுகம் செல்லச் செல்ல உத்தம தன்மை நிரம்பிய மற்றும் உண்மை தன்மை கொண்ட குருமார்கள் கிடைப்பது அரிதாகி கொண்டே வரும்.
எவர் ஒருவர் தன் வாழ்நாளில் ஏதோ ஒரு கணபதியின் அனுக்கிரகத்தை மட்டும் பெற்றுவிட்டு வாழ்ந்தாலே அவர்களுக்கு எந்தவிதமான மாந்திரீக தீமையும் நெருங்காது .
உச்சிஷ்ட கணபதியின் அருளாசியை பெற்றுவிட்டால் எந்த ஒரு தெய்வத்தையும் அனுக்கிரகம் கிடைக்கும்.
அவ்வாறு கிடைத்த அனுக்கிரகம் இப் பிறவி முழுக்க நீடிக்கும்.
சிவராஜ யோக ஜோதிடர்வீரமுனி
9092116990
ராஜபாளையம்