Connect with us

திசைவெரட்டி செடியை மிதித்ததால் பாதை மாறி காட்டுக்குள் எங்கோ சென்ற பெண்

Latest News

திசைவெரட்டி செடியை மிதித்ததால் பாதை மாறி காட்டுக்குள் எங்கோ சென்ற பெண்

பொதுவாக காடுகளுக்குள் திசைவெரட்டி என்ற தாவரம் வளருவதாக சொல்லப்படுவதுண்டு. இந்த தாவரத்தில் தெரியாமல் நாம் மிதித்து விட்டால் நம்மை மதிமயக்கி நம் மூளையை குளறுபடி செய்து விடும் இரண்டு மூன்று நாட்களுக்கு நம்மை மறந்து எங்காவது காட்டுக்குள் சுற்றவைத்து விடும்.

தனியாக சென்று இந்த தாவரத்தில் மிதித்துவிட்டால் காட்டுக்குள் நாம் வழிமாறி சென்று விடுவோம்.

சதுரகிரி மலைப்பகுதிகளிலும், கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதிகளிலும் இந்த தாவரம் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு.

இருப்பினும் இது பற்றிய முழு விவரங்கள் வனத்துறைக்கே தெரியாது.

சமீபத்தில் கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை என்ற காட்டுக்குள் சென்ற ஒரு பெண் இது போல செடியை மிதித்து காட்டுக்குள் 3 நாட்கள் அலைந்து தற்போது வனத்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கு கொரொனா தொற்று உறுதி!

More in Latest News

To Top