Latest News
திருவாரூர் கமலாலய குளத்தில் ஆட்டோ ஓட்டுநர் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்
திருவாரூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. இங்கு இருப்பது புகழ்பெற்ற கமலாலய குளம் ஆகும். மிகப்பெரிய குளமான இந்த குளத்தில் பக்தர்கள் குளிப்பது வழக்கம். நேற்று உள்ளூரை சேர்ந்த வெங்கடேசன் என்ற ஆட்டோ டிரைவர் ஒருவர் குளிக்க போன இடத்தில் உள்ளே மாட்டிக்கொண்டார் நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.
இதனிடையே கோவிலில் குளித்த ராஜஸ்தானை சேர்ந்த முஸ்கான் என்ற சிறுமியும் கோவில் குளத்தில் மூழ்கினார். இருவரையும் தீயணைப்பு துறையினர் நேற்று மாலையில் இருந்து தேடி வருகின்றனர்.
இருப்பினும் இன்று காலை முஸ்கான் என்ற சிறுமி மட்டும் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.அவரை உடற்கூறு ஆய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வெங்கடேசனை நேற்றிலிருந்து தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தேடியும் இதுவரை அவர் உடல் கிடைக்கவில்லை.
இன்று காலை 6 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் கமலாலயக் குளத்தில் சிறிய படகு மூலம் ஆட்டோ ஓட்டுநரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
