Published
11 months agoon
திருவாரூரில் உள்ள ஆழித்தேர் உலக புகழ்பெற்றது. திருவாரூர் தியாகராஜர் கோவிலின் தேரான இந்த தேர் புகழ்பெற்றது என்பதும் ஆசியாவிலேயே பெரியதும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஊரின் தெற்கு ரத வீதிக்கு டாக்டர் கலைஞர் சாலை என மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் தான் கலைஞரின் சொந்த மாவட்டம் ஆகும். அவரின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் திருக்குவளை ஆகும். திருவாரூர் ./
திருவாரூர் ஆழித்தேர் பல வருடங்களாக தேரோட்டம் நடைபெறாமல் சில தடங்கல்களால் நின்றபோது, 1970 ஆம் ஆண்டு கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது, அவருடைய முயற்சியாலும் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் முயற்சியாலும் மறுபடியும் ஆழித் தேரோட்டம் நடைபெறத் தொடங்கியது.
இந்த நிலையில் திருவாரூர் தெற்கு ரத வீதியை டாக்டர் கலைஞர் சாலை என தமிழக அரசு வைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாஜகவினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.