திருவண்ணாமலை- சிவராத்திரியான இன்று எடுக்கப்பட்ட அமானுஷ்ய புகைப்படம்

87

திருவண்ணாமலை திருத்தலம் உலக புகழ்பெற்றது. பல ஞானிகள், மகான்கள் இங்கு வந்துதான் வாழ்ந்து இறுதியாக ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள். ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், யோகிராம் சுரத்குமார் என எண்ணற்ற மகான்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்து இன்னும் ஜீவசமாதியானாலும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இங்குள்ள அண்ணாமலையாரை வழிபட அனுதினமும் பக்தர்கள் வந்து குவிகின்றனர். கிரிவலப்பாதையில் பக்தர்கள் எந்த நேரமும் கிரிவலம் செல்கின்றனர்.பவுர்ணமியன்று ஊர் முழுவதும் மக்கள் வெள்ளம் திரண்டு கிரிவலம் செல்லும். அந்த அளவு பக்தர்கள் வருகின்றனர் இங்கு.

மலையை 24மணி நேரமும் பல சித்தர்கள் சுற்றி வருவதாக ஐதீகம்.சில வருடம் முன்பு ஒரு மின்சார ஊழியர் இங்கு ஒரு பறக்கும் சித்தரை வீடியோ எடுத்தார் என அந்த காணொளி வைரலானது.

இன்று 11.3.2021 திருவண்ணாமலையில் காலை 7 மணி அளவில் அங்குள்ள மலைப்பாதையில் ஒருவர் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். ஏதோ சித்தரின் நிழலோ என சொல்லக்கூடிய அளவு அந்த புகைப்படம் வித்தியாசமாக உள்ளது.

இந்த அதிசயபுகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/photo?fbid=1986236398194830&set=a.117113705107118

பாருங்க:  திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை
Previous articleஇன்று மஹா சிவராத்திரி – கண்டிப்பா கோவிலுக்கு போங்க
Next articleமஞ்சிமா மோகனுக்கு பிறந்த நாள் பிரபலங்கள் வாழ்த்து