திருவண்ணாமலையில் நாளை மலைமேல் மஹாதீபம் ஏற்றப்படுகிறது. மஹாதேவன் திருவண்ணாமலை மலையில் மஹாதீபம் ஏற்றப்படுவதை வருடம் தோறும் அதிகமான பக்தர்கள் வருவர். காலம் காலமாக நடந்து வரும் மிகப்பெரும் உயரிய விழாவாக திருவண்ணாமலை தீப விழா நடத்தப்படுகிறது.
வருடம் தோறும் தீப விழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்கு கிரிவலமும் செல்வர். இந்த வருடம் தீப விழாவுக்கு வர இருக்கும் பக்தர்கள் கொரோனா காரணமாக அனுமதிக்கப்படவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே யாரும் வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு வரக்கூடாது என தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மலைமேல் ஏற்றப்படும் தீபக்கொப்பறை மலை மேலே கொண்டு செல்லப்பட்டது.