Tamil Flash News
திருவானைக்காவல் போனால் பார்த்தசாரதி விலாஸ் நெய் ரோஸ்ட் ருசிக்க மறக்காதிங்க!
திருச்சியில் புகழ்பெற்ற ஒரு இடம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில். இங்கு ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் இந்த ஸ்தலம் நீர் ஸ்தலம் ஆகும்.
இந்த ஊரில் புகழ்பெற்ற ஒரு ஹோட்டல்தான் பார்த்தசாரதி விலாஸ் என்ற ஹோட்டல் ஆகும்.
79 வருட பாரம்பரியம் நிறைந்த அந்தக்கால ஹோட்டல் இதுவாகும். திருவானைக்காவல் கோபுரத்தின் மேல விபூதி பிரகாரத்தின் அருகில் உள்ளது இந்த ஹோட்டல்.
அந்த காலத்தில் திருச்சி வரும் முக்கிய நபர்கள். இந்த கடையின் நெய் ரோஸ்ட்டை தான் விரும்பி சாப்பிடுவார்களாம்.
எம்.ஜி.ஆர் காமராஜர் போன்றோரும் திருச்சி வரும்போது இந்த கடையின் நெய் ரோஸ்ட்டை விரும்பி சாப்பிடுவார்களாம்.
இந்த கடையில் நெய் ரோஸ்ட்டை சூப்பர் என்றுதான் அழைக்கிறார்கள். 80 ஆண்டுகளாக ஒரே பக்குவத்தில் தான் நெய்ரோஸ்ட்டை தயாரிக்கின்றனர்.
நான்கு பங்கு புழுங்கல் அரிசிக்கு ஒரு பங்கு உருட்டு உளுந்து இந்தக் கலவை
கையில் அள்ளினால் மாவு வழியாமல் அதே பதத்தில் தோசைகல்லில் தோசை வார்க்கப்படுகிறது .
தோசையில் வட்டவட்டமாக கோடுகள் தெரிவது இந்த தோசையின் சிறப்பு எல்லா தோசைகளிலும் இப்படி அதிக கோடுகள் வராதாம். தோதை வேக போகும் நேரத்தில்தான் நெய்யை பக்குவமாக ஊற்றுகின்றனர்.
சுத்தமான வெண்ணெய் வாங்கி அதை உருக்கி நெய்யாக மாற்றி அந்த நெய்யை மட்டுமே பயன்படுத்துகின்றனர். எல்லா நெய்களையும் இவர்கள் பயன்படுத்துவதில்லை.
சூப்பர் என்று அழைக்கப்படும் இந்த நெய் தோசையை சூடாக சட்னி, சாம்பார் காரசட்னியுடன் சாப்பிடுவது அலாதி சுகம்.
1943ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஹோட்டலை தற்போது மூன்றாவது தலைமுறையாக வைத்தியநாதன் என்பவர் நிர்வகித்து வருகிறார்.
தமிழ்நாடு அளவில் புகழ்பெற்றது இந்த ஹோட்டல். நீங்கள் திருச்சி சென்றால் இந்த கடையில் நெய்ரோஸ்ட்டை சுவைக்காமல் வராதீர்கள்.