கொரோனாவுக்கு பிறகு அதிகரிக்கும் கூட்டம்- திருப்பதியில் இலவச டிக்கெட் பெற புது வசதி

கொரோனாவுக்கு பிறகு அதிகரிக்கும் கூட்டம்- திருப்பதியில் இலவச டிக்கெட் பெற புது வசதி

கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவலின்போது இதுவரை திருப்பதி கோவில் வரலாற்றிலேயே இல்லாத அளவு கோவில் நடை மூடப்பட்டது. கோவில் நடை மூடி 160 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டது.

இதனால் பல நாட்களாக கோவிலுக்கு செல்லாதவர்கள் திருப்பதியில் குவியத்துவங்கினர். திருப்பதியில் தற்போது தினமும் ரூ.300 சிறப்பு தரிசனத்தில் 16 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 6 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலமாகவும், இலவச தரிசன டிக்கெட்டுகள் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இலவசமாக தரிசனம் செய்யும் பக்தர்கள் அதிகம் வருவதால் ரயில் நிலையம் ரயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாஸ் பக்தர்கள் ஓய்வறையில் 24 மணி நேரமும் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.

இந்த டிக்கெட்டுகளை பெற வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும். தரிசனத்திற்கு 1 அல்லது 2 நாள் ஆகும் என்பதால் அதற்கேற்ப பக்தர்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டு திருப்பதி  வரவேண்டும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.