கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவலின்போது திருப்பதி கோவில் மூடப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்து லேசான இயல்பு நிலை திரும்பியபோதும் மற்ற மாநிலங்களுக்கிடயே போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் கார் மூலம் வருபவர்கள் மட்டும் ஏழுமலையானை தரிசித்து வந்தனர்.
ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேர் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதி என்ற நிலையில்
ஆன்லைன் மூலம் அதிக பக்தர்கள்சுவாமியை தரிசிக்க வருகின்றனர்.
இதனைக் கருத்தில்கொண்டு, நேற்றுமுதல் தினமும் 19 ஆயிரம் ஆன்லைன்டிக்கெட்களை தேவஸ்தானம் இணையதளம் மூலம் வெளியிட தொடங்கியது. இதன் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்துடிசம்பரில் சுவாமியை தரிசிக்கலாம்.