திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய கடும் கட்டுப்பாடு

112

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். மற்ற கோவில்களுக்கு செல்வதை விட இந்தியா முழுவதும் ஏன் உலகமெங்கும் இருந்தும் கூட திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வருகிறார்கள்.

கடந்த வருடம் கொரோனா நேரத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் நீண்ட மாதங்கள் மூடப்பட்டிருந்தது.

இருப்பினும் கொரோனா குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் வந்துவிட்டனர். இவர்கள் திருப்பதி உள்ளிட்ட கோவில்களுக்கு அதிகம் படையெடுக்கின்றனர் கூட்டத்தை நிர்வாகத்தினரால் கட்டுப்படுத்த முடியாத சூழலில் கொரோனா தொற்று சில இடங்களில் அதிகரித்திருப்பதாக சொல்வதன் அடிப்படையிலும் சில கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி கொரோனா நெகட்டிவ் என அரசு மருத்துவமனையின் சர்ட்டிபிகேட் இருந்தால்தான் திருப்பதி கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பாருங்க:  விஜயகாந்துக்காக எஸ்.வி சேகர் பிரார்த்தனை
Previous articleநடிகை ஸ்ரேயா லேட்டஸ்ட் புகைப்படங்கள்
Next articleஏப்ரல் 1 முதல் கார்களில் ஏர்பேக் கட்டாயம்