Latest News
திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்-நெரிசலை சமாளிக்க தேவஸ்தானம் தீவிரம்
உலகப்புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றுதான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு ஒரு நாளைக்கு பல லட்சம் பேர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
பல பெரிய கோவில்களில் இரண்டு மணி நேரம் , மூன்று மணி நேரம் கூட க்யூவில் நிற்க முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் திருப்பதி எல்லாம் சென்றால் 2 நாளுக்கும் மேலாக க்யூவில் நிற்கும் அதிசயம் எல்லாம் நடக்கும்.
இங்கு 21 வைகுண்டம் க்யூ காம்பளக்ஸ் கட்டபட்டு இருக்கிறது. இதற்குள் அனைவரையும் போட்டு அடைத்து விடுவார்கள். அந்த வரிசையில் நின்றே கொஞ்சம் கொஞ்சமாக நகரவேண்டும்.
தற்போது பள்ளிக்கூட விடுமுறை என்பதாலும், வார விடுமுறை என்பதாலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் வருகிறது. இதை சரி செய்ய தேவஸ்தானம் திணறி வருகிறது. அனைத்து க்யூ காம்ப்ளக்ஸ்களும் நிரம்பி வழிகிறது. கோவிலுக்கு வரும் கூட்டம் எல்லாம் 4 கிமீக்கு மேல் நிற்பதால் மக்களுக்கு அடிப்படை வசதிகளான தண்ணீர் மற்றும் உணவுக்கு தேவைகளை நிறைவு செய்ய தேவஸ்தானம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
