Latest News
திருப்பதிகோவிலில் முதல்வர்கள் ஜெகன்மோகன் மற்றும் எடியூரப்பா இணைந்து வழிபாடு
ஆந்திராவில் புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் முக்கிய விழா பிரம்மோற்சவம் ஆகும். இந்த விழா இங்கு புகழ்பெற்ற விழா என்பதால் கூட்டம் இங்கு கட்டுக்கடங்காமல் இருக்கும்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வு கருடசேவை நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆந்திரமுதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார் இன்றும் திருப்பதி கோவிலில் நடக்கும் பல்வேறு ஆன்மிக விழாக்களில் ஜெகன் மோகனும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் இருவரும் கலந்து கொண்டனர்.
இன்று காலை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சுவாமி தரிசனத்திற்கு பிறகு, இருவரும் நாத நீராஞ்சன மண்டபத்தில் நடைபெறும் சுந்தர காண்ட பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். ஆந்திர முதல்வருடன், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர், அமைச்சர்கள்,நடிகை ரோஜாஆகியோர் உடனிருக்கின்றனர்.