ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இக்கோவிலில் அடிவாரத்தில் இருந்து அரசு பஸ்களில் தான் மேலே செல்வர். தனியார் வாகனங்களிலும் செல்வர்.
வாகனங்களில் செல்ல விரும்பாதோர் அங்குள்ள அலிபிரி மலைப்பாதையில் செல்வர். இந்த மலைப்பாதையில் நேற்று மாலை பக்தர்கள் நடந்து சென்றபோது 6 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது இதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.
இதை கேள்விப்பட்டு வந்த வன ஊழியர் ஒருவர் அந்த பாம்பை லாவகமாக பிடித்து காட்டுக்குள் விட்டார்.