Corona (Covid-19)
திருப்பதி வேதபாடசாலையில் மாணவர்களுக்கு கொரோனா
கடந்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா தொற்று இந்த வருடம் மார்ச் ஆனாலும் விடுவது போல் தெரியவில்லை. சில நாட்களாக குறைந்ததாக சொல்லப்பட்டு வரும் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இது விசயமாக ஆலோசிக்க நாளை பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருமலையில் வேதகிரி எனும் பகுதியில் உள்ள வேதபாட சாலையில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங் களை சேர்ந்த மாணவர்கள் வேதம் படித்து வருகின்றனர். இவர்களில் 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.