Connect with us

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க ராஜபக்‌ஷே வருகை

Latest News

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க ராஜபக்‌ஷே வருகை

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச 2 நாள் பயணமாக நேற்று திருப்பதி வந்தார். இன்று அவர் ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளார்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது துணைவியார் ஷிராந்தி ராஜபக்ச ஆகியோர் 2 நாள் பயணமாக நேற்று தனி விமானம் மூலம் கொழும்புவிலிருந்து ரேணிகுண்டா விமான நிலையம் வந்தனர். அங்கு ராஜபக்சவை, ஆந்திர அரசு சார்பில் துணை முதல்வர் நாராயணசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கல்லூரி மாணவிகள் பரத நாட்டியம், குச்சுப்புடி நடனம் ஆடியவாறு வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயண், திருப்பதி எஸ்.பி. வெங்கட அப்பல் நாயுடு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ராஜபக்ச, காரில் மிகுந்த பாதுகாப்புடன் திருமலைக்குச் சென்றார். அங்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, பாதுகாப்பு அதிகாரி கோபிநாத் ஜெட்டி ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் ராஜபக்ச தம்பதியினர் திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினர். இன்று காலை 7.30 மணியளவில் திருப்பதி ஏழுமலையானை அவர்கள் தரிசனம் செய்ய உள்ளனர். அதன் பின்னர் அவர்கள் கொழும்பு திரும்புகின்றனர்.

பாருங்க:  முக.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி

More in Latest News

To Top